Monday, March 20, 2006

பூங்கா ஆரோக்கியம் - 1


கம்யூட்டர் முன் அமர்ந்து வெகு நேரம் வேலைசெய்பவரா நீங்கள்..இதோ உங்களுக்கான டிப்ஸ்..

கம்ப்யூட்டரின் திரையானது கண்பார்வையில் இருந்து 20 முதல் 26 இஞ்ச்சுகள் தள்ளியிருக்கிற வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் கம்ப்யூட்டர்கள் இருக்கும் அறைகள் ஏர்கண்டிஷன் செய்யப்படுவதால், ஏசியில் இருந்து வரும் காற்று கண்ணுக்கு நேராக படும்படி உட்காரக்கூடாது. கம்ப்யூட்டர் இருக்கும் அறையில் வெளிச்சம் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பளீர் வெளிச்சமும் இருக்கக்கூடாது.

மங்கலான வெளிச்சமாகவும் இருந்து விடக்கூடாது. கம்ப்யூட்டர்பணியின் போது ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒருமுறையும் கம்ப்யூட்டர் திரையில் இருந்து கண்களை அகற்றி 20 மீட்டர் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.இப்படிச் செய்யும்போது கண்களுக்கு இயல்பான பாதுகாப்பு கிடைக்கக்கூடும்.

அதோடு கம்ப்யூட்டரில்`ஆன்ட்டி ரிப்ளெக்ஷன் கோட்டிங்` உள்ளவாறு பயன்படுத்த வேண்டும். மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அதில் `ஆன்ட்டி ரிப்ளெக்ஷன் கோட்` உள்ளதாக அணிய வேண்டும். நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் கண்ணில் உள்ள விழிலென்சின் சுருங்கி விரியும் தன்மை குறைவு படுகிறது.இது வெள்ளெழுத்து என்ற நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் கம்ப்யூட்டர் திரையில் உள்ள எழுத்துக்களை படிப்பதற்கும், கண்ணுக்கு அருகில் வைத்து வேலை செய்வதற்கும் சிரமமாய் இருக்கும். இந்த பிரச்சினையை சரி செய்ய `ப்ராக்ரெஸிவ் `கண்ணாடி உள்ளது. இதிலும் `ஆன்ட்டி ரிப்ளெக்ஷன் கோட் ` செய்து அணியலாம்.

பை போகல் எனப்படும் இரட்டை கண்ணாடி அணிபவர்கள் மிகுந்த சிரமப்பட்டு கம்ப்ïட்டரை பார்க்க வேண்டியிருக்கும்.இதற்கு `ப்ராக்ரெஸிவ் லென்ஸ `டன் எஸ்.பி.2 என்ற `ஸ்பெஷல் டிண்ட்டடு` செய்த கண்ணாடியை அணிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டரால் உலர்ந்த கண்கள் பாதிப்பு ஏற்பட்டால் கண் டாக்டர் அறிவுரைப்படி சொட்டு மருந்து வகையான `லூப்ரிகேட்டிங் ட்ராப்ஸ்` பயன்படுத்தலாம்.

தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பயன்படுத்தி கண் சிமிட்டல் குறைந்து போனவர்கள் அடிக்கடி சிமிட்டலை தொடர வேண்டும். அதோடு கண்களை மூடிக் கொண்டு வட்டச்சுழற்சி முறையில் ஒருமுறை சுழற்ற வேண்டும். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து பின்பு கண்களை திறந்து மூச்சை மெதுவாக விட வேண்டும். கம்ப்யூட்டர் அத்யாவசியம் என்றான பிறகு அதனால் கண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இந்த விதத்தில் சரி செய்து கொள்ள முடியும். இதனால் வீணான பயம் தேவையில்லை.

பூங்கா சமையல் - 1


கடலைக் குழம்பு
தேவையானவை: கறுப்பு கொண்டை கடலை & 1 கப், பெரிய வெங்காயம் & 2, தக்காளி & 2, இஞ்சி, பூண்டு விழுது & 2 டீஸ்பூன், மிளகாய் தூள் & 2 டீஸ்பூன், தனியா தூள் & 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், புளி தண்ணீர் & கால் கப், கறிவேப்பிலை & சிறிது, உப்பு & தேவைக்கேற்ப.

தாளிக்க: பட்டை & 2 துண்டு, எண்ணெய் & 4 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது.

செய்முறை: கொண்டை கடலையை 6 முதல் 8 மணி நேரம் வரை நன்கு ஊறவிடுங்கள். ஊறிய கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை காயவைத்து, பட்டையை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்தூள், தனியாதூள், தக்காளி, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் புளித் தண்ணீரை சேர்த்து, அதனுடன் கொண்டை கடலையையும் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள். கடைசியில் சிறிது கறிவேப்பிலை சேருங்கள்.

பூங்கா தகவல் மையம்-2

ஆன்லைன் கிரிக்கெட் கேம்
Stick Cricket
Npower Test Series
Cann Cricket
Virtual Cricket
ஜோரா விளையாடுங்க விளையாடுங்க

Tuesday, March 14, 2006

கவிதை பூங்கா-1

கலக்கம்
புத்தகத்தைப் பார்த்தேன் புணிதமாக இருந்தது
நானும் எடுத்துப் படித்தேன் புரியவில்லை
பேருந்துபலகை பார்த்தேன் சுத்தமாக இருந்தது
படித்துப்பார்த்தேன் புரியவில்லை
எழுதுகோல் பார்த்தேன் வாளென தெரிந்தது
எழுதிப்பார்த்தேன் எழுதமுடியவில்லை
கை, கால், கண் இருந்தும் பயனற்றுப்போனேன்
கண் கலங்கி உங்கள் முன்
முதியோர் பள்ளியில்……

பூங்கா தகவல் மையம்-1


பணம் சம்பாதியுங்கள்
கூகுள் தரும் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இணைத்து வருவாய் பெறலாம்.

இதற்கு நீங்கள் யேதேனும் இணையதளம் அல்லது பிளாக்( blog )தளம் வைத்திருந்தால் போதும். பிளாக் தளம் இல்லையெனில் நீங்கள் blogger.com ல் இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம். கூகுள் தரும் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இணைத்து வருவாய் பெறலாம்.

கூகுள் விளம்பரங்கள் உங்கள் இணையபக்கத்தில் பலதடவை( கிளிக் செய்து ) பிறரால் பார்க்கப்பட்டால் உங்கள் கணக்கில் விளம்பரங்களுக்கு ஏற்ப பணம் போடப்படும். உங்கள் தளம் ஆங்கிலம் மற்றும் கூகுள் குறிப்பிடும் சில குறிப்பிட்ட மொழிகள் இவற்றால் இருந்தால் மட்டுமே கூகுள் விளம்பர சேவைக்குள் நீங்கள் இணையமுடியும். நீங்கள் விண்ணப்பித்த உங்கள் தளத்தை கூகுள் ஆய்வுக்குப் பிறகுதான் அங்கீகாரம் செய்யும். ஆக உங்கள் தளம் கூகுள் நிறுவனம் சொல்லும் விதிகளுக்குட்பட்டு இருக்க வேண்டும்.

விபரங்களுக்கு..
கிளிக்1
கிளிக் 2
கிளிக் 3

சிறப்பாக செயல்பட்டால் இதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்..கூகுள் விளம்பரங்களை பெற்றுள்ள தளங்கள்
நாளிதழ்
பிளாக் தளம்

பூங்கா விளையாட்டு அரங்கம்-1

உலக சாதனை
ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும், 3-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 2-2 என்ற கணக்கில் தொடர் சமன்நிலையில் இருந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் உலகச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 434 ரன் குவித்து உலக சாதனை படைத்தது. இதன் மூலம் உலக சாதனை படைத்தது மட்டுமல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 400 ரன்னை தொட்ட முதல் அணி என்ற பெருமையையும் அது பெற்றது. இதற்கு முன்பு 1995-96-ம் ஆண்டு கண்டியில் (இலங்கை) நடந்த ஆட்டத்தில் இலங்கை அணி, கென்யாவுக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 398 ரன் எடுத்து இருந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை 434 ரன் எடுத்த ஆஸ்திரேலிய அணி முறியடித்தது.

பின்னர் 435 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களில் ஒருவரான டிப்பென்னர் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதனால் 2-வது விக்கெட்டுக்கு சுமித்துடன், கிப்ஸ் இணைந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டது. எந்த திசையில் பந்தை வீசினாலும் அதை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விளாசி ரன் சேர்த்தது இந்த ஜோடி. நீங்கள் தான் அடிப்பீர்களா நாங்களும் அடிக்கிறோம் பாருங்கள் என்பதுபோல் இருந்தது தென் ஆப்பிரிக்க வீரர்களின் ஆட்டம்.


கடைசி வரை விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 438 ரன் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் உலக சாதனை வெற்றியை பெற்றது. பவுச்சர் 50 ரன்னுடன் இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றார். ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை (434 ரன்) ஒரே நாளில் தூள் தூளாக்கியது தென் ஆப்பிரிக்கா. இந்த வெற்றியின் மூலம் 3-2 என்ற கணக்கில் தொடரையும் அந்த அணி கைப்பற்றியது.

புதிய உலக சாதனை படைத்து விட்டோம் என்ற ஆஸ்ரேலியாவின் கனவு நான்கே மணிநேரத்தில் முடிவடைந்தது. பாவம் ஆஸ்ரேலியர்கள் பவுலிங் போட்டு போட்டு களைத்தது மட்டுமல்லாமல் வெற்றி கோப்பையையும் தவறவிட்டனர்…..


மீண்டும் இது போன்ற போட்டியைக்காண எத்தனை ஆண்டுகள் தவம் செய்ய வேண்டுமோ?

இதற்கிடையே நம்மவர்கள் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டியில் முன்னிலை பெற்றனர்.

Monday, March 13, 2006

பக்தி பூங்கா-1

ஸ்ரீ கணபதி பூஜை

ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸசிவர்ணம்
சதுர்புஜம் ப்ரஸந்ந வதனம் த்யாயேத்
சர்வ விக்நோப சாந்தயே
அசுத்யா வெட்சி ரூபாய
நிர்குணாய குணாத்மனே
ஸமஸ்த்தா ஜகதார மூர்த்தயே
ப்ரம்ம புத்ராய நமஹ
ஓம் கணேச நட்சத்திர ரோகிணிம்
ராசி ரூபிணிம் மந்த்ர மயம்
நமாம் மித்ரமாம் பீடரூபிணிம்
சர்வ ரூபிணிம் சர்வஸே ஜமன்மீதே
பய பாஸ்ய ராகிதோ நித்யம்
துர்கே தேவி நமோஸ்துதே

ஏக தந்தம் சூர்ப்பநகம் கஜமந்த்ரம்
பாஸாங்குச தேகம் தாயே சித்தி விநாயகம்